இதயத்துக்கு ரொம்ப இதமான ராகம் இது. இதயத்துக்கு ரொம்ப நல்லதுன்னுகூட ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
இந்த ராகத்தோட
ஆரோகணம் – ச ரி2 க2 ம1 ப த1 நி3 ச
அவரோகணம் – ச நி3 த1 ப ம1 க2 ரி2 ச
“மெளனராகம்” படத்துல வர்ற “மன்றம் வந்த தென்றலுக்கு” ஒரு பாட்டே போதும் இந்த ராகத்தோட அருமைய சொல்ல.
“ஜானி” படத்துல வர்ற “காற்றில் எந்தன் கீதம்” பாட்டயும், “கேளடி கண்மணி” படத்துல வர்ற “மண்ணில் இந்த காதலன்றி” பாட்டயும், “காதலுக்கு மரியாதை” படத்துல வர்ற “என்னைத்தாலாட்ட வருவாளோ” பாட்டயும், “பொன்னுமணி” படத்துல வர்ற ” நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு” பாட்டயும், “வருஷம் 16″ படத்துல வர்ற “பூ பூக்கும் மாசம் தை மாசம்” பாட்டயும், “தூரல் நின்னு போச்சு” படத்துல வர்ற “தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி” பாட்டயும், “செண்பகமே செண்பகமே” படத்துல வர்ற “மஞ்ச பொடி தேய்க்கையிலே” பாட்டயும், “குணா” படத்துல வர்ற “உன்னை நான் அறிவேன்” பாட்டயும், “சின்னத்தம்பி” படத்துல வர்ற “போவோமா ஊர்கோளம்” பாட்டயும் யாராலும் மறக்க முடியுமா?
” நாயகன்” படத்துல வரும் ” நிலா அது வானத்துமேலே” பாட்டும், “ஆனந்தகும்மி” படத்துல வரும் “ஒருகிளி உருகுது உரிமையில் பழகுது” பாட்டும், “கிழக்கு வாசல்” படத்துல வரும் “பாடிப்பறந்த கிளி” பாட்டும் “தழுக்கி தழுக்கி உடல்” பாட்டும் இந்த ராகத்துல இசைஞானி போட்ட பாடல்கள்தான்.
சரி, இந்த ராகத்துல இவர் போட்ட பாடல்களை வரிசைப்படுத்துறேன். எப்படி இருக்குன்னு நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.
“ஆகாயத்தாமரை அருகில் வந்ததே… – நாடோடிப்பாட்டுக்காரன்”
“ஆலமரம் வேலமரம்… – செந்தூரம்”
“அந்த வானத்த போல… – சின்னக்கவுண்டர்”
“அரிதாரத்த பூசிக்கொள்ள… – அவதாரம்”
“சின்ன மணிக்குயிலே… – அம்மன் கோயில் கிழக்காலே”
“எங்கே செல்லும் இந்தப் பாதை… – சேது”
“என்னைத்தாலாட்ட வருவாளோ… – காதலுக்கு மரியாதை”
“என்னுள்ளே என்னுள்ளே… – வள்ளி”
“கூட்சு வண்டியிலே ஒரு காதல்… – குங்குமச்சிமிழ்”
“இதயமே இதயமே என்னை மறந்தது… – ஜூலி கணபதி”
“ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு… – குரு சிஷ்யன்”
“காற்றில் எந்தன் கீதம்… – ஜானி”
“கத போலத்தோனும் இது கதயும் இல்ல… – வீரத்தாலாட்டு”
“கண்ணே இன்று… – ஆணழகன்”
“கீரவாணி கீரவாணி… – பாடும் பறவைகள்”
“குயிலே குயிலே… – “காதல் ஓவியம்”
“குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி… – பிரண்ட்ஸ்”
“மலரே தென்றல் பாடும்… – வீட்ல விசேஷங்க”
“மலர்களிலே ஆராதனை… – கரும்பு வில்”
“மலையோரம் மாங்குருவி… – எங்க தம்பி”
“மலையோரம் வீசும்காற்று… – பாடு நிலாவே”
“மாமனோட மனசு மல்லியப்புபோலே… – உத்தமராசா”
“மன்றம் வந்த தென்றலுக்கு… – மெளனராகம்”
“மஞ்சபொடி தேய்க்கையிலே… – செண்பகமே செண்பகமே”
“மஞ்சள் பூசும்… – பிரண்ட்ஸ்”
“மண்ணில் இந்த காதலன்றி… – கேளடி கண்மணி”
” நடந்தால் இரண்டடி… – செம்பருத்தி”
” நான் புடிச்ச கிளியே… – ராசுக்குட்டி”
” நீதானே நீதானே… – தாலாட்டு பாடவா”
” நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு… – பொன்னுமணி”
” நிலா அது வானத்து மேலே… – நாயகன்”
“ஓ பாப்பா லாலி… – இதயத்தை திருடாதே”
“ஒளியிலே தெரிவது… – அழகி”
“ஊரத்தெரிஞ்சுக்கிட்டேன் உலகம்… – படிக்காதவன்”
“ஒரு காதல் தேவதை… – சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு”
“ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது… – ஆனந்தகும்மி”
“ஒரு முத்துக்கிளி… – தாயம்மா”
“பாடிப்பறந்த கிளி… – கிழக்கு வாசல்”
“பாடும் வானம்பாடி… – நான் பாடும் பாடல்”
“பூ பூக்கும் மாசம்… – வருஷம் 16″
“பூங்காற்றே இனி போதும் என் உடல்… – படிச்சபுள்ள”
“பூங்கொடிதான் பூத்ததம்மா… – இதயம்”
“போவோமா ஊர்கோளம்… – சின்னத்தம்பி”
“ராஜ ராஜ சோழன் நான்… – ரெட்டைவால் குருவி”
“ராசாத்தி மனசுல… – ராசாவே உன்ன நம்பி”
“ரோட்டோரப்பாட்டுச்சத்தம்… – என் மனவானில்”
“சிட்டுபறக்குது குத்தாளத்தில்… – நிலவே முகம் காட்டு”
“தழுக்கு தழுக்கி… – கிழக்கு வாசல்”
“தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி… – தூறல் நின்னு போச்சு”
“தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு… – ஈரமான ரோஜாவே”
“உன் குத்தமா என் குத்தமா… – அழகி”
“உன் நெஞ்சத்தொட்டு சொல்லு… – ராஜாதி ராஜா”
“உன்ன நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்… – அபூர்வசகோதரர்கள்”
“உன்னை நான் அறிவேன்… – குணா”
“வானம் அதிரவே… – ரமணா”
“வானத்திலிருந்து குதிச்சு வந்தனா… – பூந்தோட்டம்”
“வெண்ணிலவுக்கு வானத்த… – தாலாட்டு பாடவா”
“ஹவ் டு நேம் இட்” ஆல்பத்துல வரும் நாலாவது டிராக்கும் “ராஜாவின் ரமணமாலை” ஆல்பத்துல வரும் “சுற்றிவரும் உலகத்திலே” பாட்டும் இந்த ராகம்தான்.
என்னப்பா இது!
ஒன் மேன் ஷோவைப் பத்தி ஏதாவது எழுதுவீங்கன்னு காத்திருந்தா… ஏமாத்திடுவீங்க போலிருக்கு.
சீக்கிரம் ஆகட்டும்!
நன்றி
கமல்
Comment by கமல் — April 24, 2006 @ 9:26 pm
Hi,dropped here accidentaly. But able to know more about Ilayaraja..Good work Kamal
Comment by Karthikeyan Muthurajan — September 22, 2006 @ 4:13 am
கூகிளிலே தேடியதில் இங்கு வந்தடைந்தேன்! – மலரே தென்றல் பாடும்…சிவரஞ்சனியோ என்ற சந்தேகத்தில்…கீரவாணி தான் என்று கண்டுகொண்டேன்.
கீரவாணியில் எனக்குத்தெரிந்த பாடல்களை நானும் தொடுத்திருந்தேன்.
சிமுலேஷன் என்பவரும் திரைஇசை ராகங்களை பட்டியலிட்டுள்ளார்!
Comment by jeevagv — December 31, 2006 @ 7:24 am
Hi Rasaiya
I just happened to visit your blog when I was googling.
You are doing gr8 job . keep it up
Thanks
Ganesh
Comment by Ganesh — May 10, 2007 @ 4:23 pm
Somehow i missed the point. Probably lost in translation
Anyway … nice blog to visit.
cheers, Procaine.
Comment by Procaine — June 19, 2008 @ 7:13 am
nalla pathivu
Comment by rahini — January 28, 2009 @ 5:10 pm
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
Comment by Kelvi.Net — February 24, 2009 @ 6:57 pm