இரு கண்கள் போதாது…

அலுவலக பேச்சு

மனோஜ்: குட் மார்னிங்டா
ராகுல்: வெரி குட் மார்னிங்டா
மனோஜ்: என்னடா லேட்?
ராகுல்: ஒரே டிராபிக்டா
மனோஜ்: ஆமாண்டா… நானும் இப்போதா வந்தேன்.
ராகுல்: இன்னைக்கு வொர்க் நெறையா இருக்கா?
மனோஜ்: இன்னும் மெயில் செக் பண்ணலடா… உனக்கு?
ராகுல்: ஒரு 1 அவர்க்கு இருக்கு. வீக் என்ட் எப்டி போச்சுடா?
மனோஜ்: செம போர்டா. சாட்டர்டெ ஈவினிங் பீச்க்கு போனேன் என் பிரண்டோட… சன்டெ படத்துக்கு போனேன். உனக்கு எப்டி போச்சு?
ராகுல்: ரெண்டு நாளும் நல்லா தூங்கினேன். என்னோட சிஸ்டர் ஆன் சைட்ல இருக்கானு சொல்லியிருக்கேன்ல அவ நேத்தைக்கு நைட் வந்துட்டா? சோ, இன்னைக்கு ஏர்லியராவே கிளம்பிடுவேன்டா.
மனோஜ்: உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்காங்க?
ராகுல்: ஐபோட், டிஜிட்டல் கேமரா, பர்பியூம்.
மனோஜ்: சாக்லெட்ஸ்?
ராகுல்: அது தான் டிபால்ட் ஆச்சேடா
மனோஜ்: ஆபிஸ்க்கு எடுத்துட்டு வரலையாடா?
ராகுல்: எடுத்துட்டு வந்திருக்கேன்டா. இனிமேதான் நம்ம டீம்மெட்ஸ்க்கு மெயில் அனுப்பனும்.
மனோஜ்: மெயில் அனுப்பிடாதடா கொஞ்சம் வெயிட் பண்ணு.
ராகுல்: ஏன்டா?
மனோஜ்: ஒரே கேபின்ல உட்காந்துட்டு இருக்கோம். பர்ஸ்ட் நான் எனக்கு வேனும்கரத எடுத்துக்கறேன், அப்புறம் மெயில் அனுப்பு

ஒருவரை ஒருவர் உரசும் தூரத்தில் இருந்தாலும் பேசுவது மெஸண்ஜரில்தான் !!

2 Comments »

  1. அதுல நீங்களும் ஒன்னா??

    அப்படி பேசறதுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

    1. வாயாலே பேசின சத்தம் வரும்.
    2. யாராவது பார்க்கும்போது கம்பியூடர்ல வேலை செறது போலவே இருக்கும் (ஆனா சாட்டிங் நடக்கும்) அதுனால பிரச்சனை வராது.
    3. மேனேஜர் வந்தா டக்னு மெசஞ்சர் மூடிட்டு வேலை பார்க்கலாம் ஒன்னும் தெரியாது.. ஆனா பேசியிருந்த சத்தம் கேட்டிருக்கும்.
    4. 4 பேரா கான்பரன்சில் பெசலாம்.. அரட்டையடிக்கலாம்.. கும்பலா நின்னாதானே கேட்கப்போராங்க.

    இப்படி நிறைய இருக்கே 🙂

    அன்புடன்
    கீதா

    Comment by கீதா — February 7, 2006 @ 8:21 pm |Reply

  2. வாங்க கீதா,
    ரொம்ப சரிங்க. அதுல நானும் ஒருத்தந்தாங்க.

    Comment by raasaiya — February 8, 2006 @ 9:43 am |Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Create a free website or blog at WordPress.com.