இரு கண்கள் போதாது…

February 2, 2006

வணக்கமுங்க!!

Filed under: மொத வாரம் — by raasaiya @ 4:53 pm

வணக்கமுங்க!
என் சொந்த ஊரு நம்பியுருங்க. கோயம்புதூருக்கு பக்கத்துல இருக்குங்க. இப்போ இருக்கறது சென்னைங்க. இங்க வந்து ஒரு 5 வருசம் ஆச்சுங்க. இத்தன நாளா ஒரு சின்ன வட்டத்துக்குள்ளயே இருந்துடேங்க. கொஞ்சம் வெளி உலகதுக்கும் வரலாம்னுதான் இந்த வலைதளதுக்கு வந்திருக்கேங்க. நெறைய வலைதளங்களை பார்த்திருக்கேன். எனக்குன்னு ஒரு வலைதளமும் இருக்கு. http://www.geocities.com/uthayakutty76/ . தமிழ்ல பண்ணலாம்ணு ஆரம்பிச்சதுக்கு காரணம் வரலாறு.காம் (http://www.varalaaru.com) தான். நம்மளுக்கு தோன்றத, தெரிஞ்சத நாலு பேரோட சேர் பண்ணிக்கறதுக்காகதான்க இந்த வலைதளம் ஆரம்பிச்சிருக்கேங்க. என்ன மாதிரியான விசயத்த சேர் பண்ணிக்க போரானு கேட்கரவங்களுக்கு முதல்லயே ஒண்ணு சொல்லிக்கறேங்க. எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல நான் ரொம்ப விரும்பி பார்த்த படம் “16 வயதினிலே” தாங்க. இந்த படம் ரொம்ப புடிக்கறதுக்கு காரனம் என்னனு யோசிச்சு பார்த்தேன்.. படத்தோட ஸ்க்ரீன்பிளே, டயலாக், பாட்டு, ரீ-ரெகார்டிங். இந்த நாலும் தான் முக்கிய காரணம். நீங்க கேட்கலாம், கதை முக்கியமில்லாயன்னு… என்னதான் கதை சூப்பரா இருந்தாலும் ஸ்க்ரீன்பிளே சரியா இல்லைனா அது அவ்ளோதாங்க. அதனாலயோ என்னவோ எனக்கு சினிமா துறைல ரொம்ப புடிச்சவங்கனு பார்த்தா… முதல்ல இளையராஜா அப்புறம் பாரதிராஜா, பாக்கியராஜ், மணிவண்ணண், வைரமுத்து.

இளையராஜா-வை பொருத்தவரைக்கும் நான் ஒரு பைத்தியம்னே சொல்லலாமுங்க. 1976ல இருந்து 2005 வரைக்கும் இளையராஜாவோட ஒரு பெரிய கலெக்சன் வச்சிருக்கேங்க. எந்த படம் எந்த வருசம் வந்திச்சு, அதுல எத்தன பாட்டு, யார் பாடினாங்க, ஒவ்வொரு பாட்டும் என்ன ராகம்.. அதெல்லாம் பின்னாடி பார்ப்போம். இதுல இளையராஜா பத்தி மட்டும்தான் இருக்கும்னு நெனச்சுக்காதிங்க. அது நம்ம உயிர் வாழ்றத்துக்கு தேவையான சாப்பாடு மாதிரி. கண்டிப்பா ஊறுகாய், சிப்ஸ் எல்லாமும் இருக்கும். 

நாளைக்கும் வாங்க!

10 Comments »

 1. வாங்க வாங்க

  நல்ல அறுசுவை உணவா போடுங்க. சாப்பிட நிறையா பேஎரு காத்துட்டிருக்கோம். 🙂

  தொடர்ந்து இதே உற்சாகத்தோட பதியுங்க.

  அப்புறம் “என் சொந்த ஒரு நம்பியுருங்க” இங்க “ஊரு” வரணும்னு நினைக்கிறேன். திருத்திடுங்க.

  அன்புடன்
  கீதா

  Comment by கீதா — February 2, 2006 @ 5:51 pm |Reply

 2. வாழ்த்துகள் உதய்.

  Comment by பரஞ்சோதி — February 2, 2006 @ 6:23 pm |Reply

 3. வாங்க பரஞ்சோதி, கீதா. ரொம்ப நன்றிங்க!
  உங்க எதிர்பார்ப்பை முடிந்த வரைக்கும் பூர்த்தி பண்ண முயர்ச்சிக்கிறேங்க.

  // என் சொந்த ஒரு நம்பியுருங்க” இங்க “ஊரு” வரணும் //

  தமிழ் டைப்பிங் கொஞ்சம் புதுசுங்க கீதா.. அடுத்த முறை கவனமா பார்த்துக்கிறேங்க.

  Comment by raasaiya — February 3, 2006 @ 10:20 am |Reply

 4. Nice… melum valara vaazhthukkal…!

  Comment by Vanitha — February 3, 2006 @ 5:12 pm |Reply

 5. அன்புள்ள உதய்,

  தங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துடன்
  எங்கள் வரலாறு ஆய்விதழ் – உங்களின்
  ஆர்வத்தைத் தூண்டியதைச் சொன்னதற்கு நன்றியையும்
  தாங்கிவரும் வெண்பா இது.

  கவிதை வடிவாயினும் ஊர்ப்பக்கப் பேச்சில்
  நவில்வதாயினும் வாசிக்கும் நேயர் – தவித்து
  அடுத்த வலைப்பக்கம் தாவா திருக்கத்
  தவிர்க்கவும் தட்டச்சுப் பிழை.

  அன்புடன்
  கமல்

  Comment by கமல் — February 3, 2006 @ 8:06 pm |Reply

 6. ரொம்ப நன்றிங்க கமல்,
  எழுத்துப் பிழை வராம பாத்துக்கணும்னுதான் என்க்கும் ஆசைங்க. போக போக சரி பண்ணிக்கறேணுங்க

  Comment by raasaiya — February 4, 2006 @ 11:40 am |Reply

 7. ஆமாம் தாங்கள் தமிழ் மணத்தில் தொடுப்பு கொடுத்துள்ளீர்களா எப்படி இதில் தொடுப்பு கொடுப்பது

  Comment by rethinavelu — February 4, 2006 @ 8:29 pm |Reply

 8. Hi,

  Welcome. the page looks cool. I am also a fan of IR. hope i would learn more about IR music from your site.

  Comment by Sureshkumar — April 11, 2006 @ 9:22 am |Reply

 9. உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி சுரேஸ்.

  Comment by raasaiya — April 11, 2006 @ 1:34 pm |Reply

 10. தாயே தாயாகிய தன்னை எனக்குத் தந்த தந்தையே
  தாயே தாயாகிய தன்னை எனக்குத் தந்த தந்தையே
  தாயும் தந்தையும் என தன்னையே தந்த தயாபரனே
  நாயேன் நானுனை நம்பியே வந்தேன்
  நாயேன் நானுனை நம்பியே வந்தேன்
  அகப்பேயே எனை விட்டோடவே அருள் செய்வாயே ….
  ரமணா …ரமணா ..ரமணா ……

  அண்ணாமலை உனை தன்னால் அழைத்தது
  சொன்னால்.அதிசயம் அம்மா அம்மா
  நீ எண்ணாமல் உன்னை அதுவாய் ஒலித்தது
  என்னே அதன் அருள் அம்மா அம்மா
  அண்ணாமலை வெறும் மண்ணின் மலை அல்ல
  அண்ணல் ரமணரின் உருவே அம்மா
  சிவனும் அருணையும் ஒன்றேனும் உண்மையில்
  தவத்திரு ரமணரும் இணைந்தாரம்மா
  ஒருவரை தொழுதால் மூவரின் அருள் வரும்
  திருத்தலம் இதுவே அருணாசலம்
  ரமணா நின் திரு பதமலர் சரணம்
  நின் திருவடியே எனக்கருணாசலம்
  அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா
  அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா
  அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா
  அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா
  அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா
  அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா

  Comment by venkat — November 24, 2012 @ 6:49 am |Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: