இரு கண்கள் போதாது…

February 8, 2006

சுத்த தன்யாசி

Filed under: மொத வாரம் — by raasaiya @ 11:21 am

இளையராஜா ஒவ்வொரு ராகத்தையும் மிக அருமையா பயன்படுத்திட்டிருக்கறார். சுத்த தன்யாசி ராகத்தை அவர் எப்படியெல்லாம் பயன்படுத்திருக்காருன்னு பார்ப்போம். கர்னாடக வாசனை அதிகம் வர்ற மாதிரிதான் எல்லோரும் பயன்படுத்துவாங்க. ஆனா இளையராஜா அதுக்கு ஒரு தனி முகமே கொடுத்திருக்கார்.

இந்த ராகத்தோட
ஆரோகணம் – ச க1 ம1 ப நி1 ச
அவரோகணம் – ச நி1 ப ம1 க1 ச

கர்னாடக வாசனையோட அமைத்த பாடல் “அலைகள் ஓய்வதில்லை” படத்துல வர்ற “விழியில் விழுந்து இதயம் நுழைந்து”. இந்த பாட்டுல ஸ்வரமும் பாடலாவே வரும். இந்த பாட்டுக்கு ஒரே ஒரு சரணம் மட்டுமே வரும்.

இதே ராகத்துக்கு வெஸ்ட்டர்ன் டச் கொடுத்து “இளமை ஊஞ்சலாடுகிறது” படத்துல வர்ற “என்னடி மீனாட்சி” பாட்ட கலக்கியிருப்பார்.

இன்னொரு உதாரணம் “ராம் லட்சுமணன்” படத்துல வர்ற “வாலிபமே வா வா”-ங்கற பாட்டு.

வேறு சில ராகங்களை மிக்ஸ் பண்ணி “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு” பாட்ட பண்ணியிருப்பார். இதுல வரும் நாதஸ்வர பீஸ்ல இந்த ராகத்தோட சுத்தமான கர்னாடக ட்ச் இருக்கும்.

இந்த ராகத்துல நெறைய கவுண்ட்டர் பாயிண்ட்ஸ் உபயோகப்படுத்தியிருக்கார். அதுக்கு உதாரணம், “ராகவனே ரமணா ரகு நாதா” பாட்டு. பி.சுசீலாவோட குரல்ல கவுண்ட்டர் பாயிண்ட்ஸ்ச அருமையா வெளிப்படுத்தியிருப்பாங்க.

“தங்க மகன்” படத்துல வர்ற “பூ மாலை….. ஒரு பாவை ஆனதே” பாட்ட இந்த ராகத்த கை பிச்சுல கலக்கிய்ருப்பார்.

“உன்னால் முடியும் தம்பி” படத்துல “புஞ்சை உண்டு நஞ்சை உண்டு” பாட்டு ஒரு அருமையான உதாரணம். படத்துலயே இந்த ராகதோட பெயரை ஜெமினி கணேசன் சொல்லி “என்ன அருமையா இந்த ராகத்தை பயன்படுத்தியிருக்கான்”னு சொல்லுவார்.

“வராது வந்த நாயகன்” பாட்டுல ரொம்ப அசாதாரணமா இந்த ராகத்தோட மீட்டர் அளவு பயன்படுத்தியிருப்பார். இந்த பாட்டோட கடைசி வரைக்கும் “தனா தனா தனா தனா”- ந்னே வர்ற மாதிரியிருக்கும்.

ஒவ்வொரு பாட்டையும் அவர் கையாண்ட விதத்தை பத்தி சொன்னா சொல்லிட்டே போகலாம். அதனால இந்த ராகத்துல அவர் அமைத்த ஒரு சில பாடகளை மட்டும் உதாரணத்திற்கு இங்கே உங்களுக்காக…

” சிரு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்… – கல்லுக்குள் ஈரம் ”
” பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜ ஜம்ஜம்ஜம்… – பூந்தோட்ட காவல்காரன் ”
” கலகலக்கும் குயிலோசை… – ஈரமான ரோஜாவே ”
” என் மனசுல பாட்டுத்தான் இருக்குது.. ”
” காலையில் கேட்டது கோயில் மணி… – செந்தமிழ் பாட்டு ” – எம்.எஸ்.வியுடன்.
” பூந்தளிர் ஆட… பொன் மலர் சூட… – பன்னீர் புஷ்பங்கள் ”
” நானாக நானில்லை தாயே… ”
” அந்தரங்கம் யாவுமே… – ஆயிரம் நிலவே வா ”
” ஆயிரம் மலர்களே… – நிறம் மாறாத பூக்கள் ”
” தீபங்கள் பேசும்… – தேவதை ”
” தாகம் எடுக்கற நேரம்… – எனக்காக காத்திரு ”
” எல்லோருக்கும்…. – மறுபடியும் ”
” என்னோட உலகம் வேறு உன்னோட உலகம் வேறு… – கிழக்கும் மேற்கும் ”
” ஏய் உன்னைத்தானே… – காதல் பரிசு ”
” இளைய நதி இனிய நதி… – மனசெல்லாம் ”
” காதல் நீதானா… – டைம் ”
” காதல் வானிலே… – ராசய்யா ”
” காலை நேரக் காற்றே… – பகவதிபுரம் ரெயில்வே கேட் ”
” கோலக்கிளியே… – காக்கைச்சிறகினிலே ”
” கொலுசு கொஞ்சும் பாதம்… – சின்னதுரை ”
” கொட்டி கிடக்குது… – தீர்த்தக்கரையினிலே ”
” குத்து குத்து கும்மாங்குத்து… – என் மனவானிலே ”
” மாலையில் யாரோ… – சத்ரியன் ”
” மனசு மயங்கும்… – சிப்பிக்குள் முத்து ”
” நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்… – காசி ”
” நான் வணங்குகிறேன்… – குரு ”
” நதியோரம்… – அன்னையோர் ஆலயம் ”
” நான் தான் மாப்பிள்ளை… – தொடரும் ”
” நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்… – சாட்டையில்லா பம்பரம் ”
” ஓ மானே மானே… – வெள்ளை ரோஜா ”
” ஒரு பூங்காவனம்… – அக்னி நட்சத்திரம் ”
” ஒரு சுந்தரி வந்தாளாம்… – அழகி ”
” பாடுக் நேரம் இதுதான்… – சூரசம்காரம் ”
” பூ பூ பூ பூத்த சோலை… – புது நெல்லு புது நாத்து ”
” பூத்து பூத்து குலுங்குதடி பூவு… – கும்பக்கரை தங்கய்யா ”
” புதிய பூவிது பூத்தது… – தென்றலே என்னைத் தொடு ”
” ருக்கு ருக்கு ரூப்கயா… – பிரண்ட்ஸ் ”
” செம்பூவே பூவே உன்… – சிறைச்சாலை ”
” சிக்காத சிட்டொன்னு கையில் வந்தா… – சேது ”
” தேன் அருவியில் நனைந்திடும்… – எனக்குள் ஒருவன் ”
” தேனா ஓடும் ஓடக்கரையில்… – பரணி ”
” உன்னை எதிர் பார்த்தேன்… – வனஜா கிரிஜா ”
” வா பொன் மயிலே… – பூந்தளிர் ”
” வசந்த கால கோலங்கள்… – தியாகம் ”

இதுல எதாவது தவறு இருந்தா சொல்லுங்க…
சரிங்க… இன்னொரு ராகத்தோட மறுபடியும் பார்க்களாமுங்க…
போய்ட்டு வாரணுங்க.

11 Comments »

 1. அன்புள்ள உதய்,

  பதிவு மிக அருமை.

  ஆனால், ‘பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு’ ஹிந்தோளம் இராகத்தில் அமைந்தது. இரண்டையும் குழப்பிக்கொள்ள வாய்ப்பு அதிகம் என என் நண்பர் கீழ்க்கண்ட கட்டுரையில் கூறியிருக்கிறார்.

  http://www.tamiloviam.com/html/Isaioviam10.Asp

  நன்றி
  கமல்

  Comment by கமல் — February 8, 2006 @ 1:34 pm |Reply

 2. நன்றிங்க கமல். ஆனால் அது ஹிந்தோளம் ராகத்தில் மட்டும் அமைந்த பாடல் இல்லைங்க.

  // சில ராகங்களை மிக்ஸ் பண்ணி “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு” பாட்ட பண்ணியிருப்பார். இதுல வரும் நாதஸ்வர பீஸ்ல இந்த ராகத்தோட சுத்தமான கர்னாடக ட்ச் இருக்கும்//

  Comment by raasaiya — February 8, 2006 @ 2:43 pm |Reply

 3. It’s really wonderful about Ilayaraja and his music”. Iam also a great fan of Ilayaraja’s music. I like his middle year songs which you mentioned “Potthivacha malliga mottu” from Manvasanai, “Mayanginen Solla Thayanginen”, “Naan Thedum Sevvanhi Poo edhu”, “Poomalaiye Thol sera va”, “Malayil yaaro manadodu pesa”, “Thalattum Poong katru Naan allava”from Gopura Vasalile, “Kalyana Then Nila” from Mounam Sammadham, “Kadhalin deepam onru” from Thmbikku endha ooru, “Ponmane Sangeetham padi va” from “Naan Adimai ellai””Va Vennila unnai thane vanam Thedudhe”. These are some songs which I like most and this list is quite a few just I reminded. I don’t know the Karnatic version of his music but something special which makes our heart feels very thin and happy is there in his music . Its really nice to read the article and remembering the songs by murmuring while reading the lyrics in your Article. Hates of to Ilayaraja and his Music. Thanks very much for sending me an excellent article about him and his music.

  Comment by C.Vijayalakshmi — February 9, 2006 @ 1:00 pm |Reply

 4. வாங்க விஜயலஷ்மி. ரொம்ப நன்றி.
  நீங்க சொன்னது முற்றிலும் சரி.

  Comment by raasaiya — February 9, 2006 @ 2:03 pm |Reply

 5. என்றும் இளமையானவை
  இளையராஜாவின் பாடல்கள்
  அதற்கு நானும் ஒரு அடிமை!
  உங்களைப்போல் பாடல்களின் ராகங்கள் எனக்குத் தெரியாது.படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ! தொடருங்கள் ராசய்யா !

  Comment by நவீன் — February 9, 2006 @ 4:12 pm |Reply

 6. வாங்க நவீண். நன்றி.
  உங்களின் ஒவ்வொரு கவிதையையும் ரசித்து படிப்பவர்களில் நானும் ஒருவன்

  Comment by raasaiya — February 9, 2006 @ 5:05 pm |Reply

 7. Could you provide me the lyrics for an old tamil song called Vennilla nilla en kannalla vaa nilla (remake of kesara sara)?
  I appreciate it. Thanks.

  Comment by Gilmore Mascarenhas — September 23, 2006 @ 9:19 pm |Reply

 8. ilayaraja

  Can u provide more information about this ?

  Trackback by Software Reviews — October 2, 2006 @ 4:38 pm |Reply

 9. i pls u all 2 send me pothivacha malliga mothu song lyrics from manvasanai.

  Comment by ashwini — February 19, 2007 @ 12:30 pm |Reply

 10. Hi Ashwini,
  Thanks for landing here…
  if you send me your id i will send the lyrics for you

  Comment by raasaiya — February 19, 2007 @ 1:04 pm |Reply

 11. Very Commendable Effort.

  I love Maestro songs especially when i try sleep. Its my thalattu.

  Thanks,
  Ganesh

  Comment by ganesh — October 9, 2007 @ 11:58 am |Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: