இரு கண்கள் போதாது…

February 13, 2006

சிந்துபைரவி

Filed under: மொத வாரம் — by raasaiya @ 1:50 pm

போன பதிவுல சுத்த தன்யாசி ராகத்துல இளையராஜா இசையமைத்த பாட்டெல்லாம் பார்த்தோம். இந்த பதிவுல சிந்துபைரவி.

இந்த ராகத்தோட
ஆரோகணம் – ச ரி2 க2 ம1 க2 ப த1 நி2 ச
அவரோகணம் – நி2 த1 ப ம1 க2 ரி1 ச நி2 ச

இசைஞானி இசையமைத்த முதல் படமான “அன்னக்கிளி” படத்துல வரும் “அன்னக்கிளி உன்னை தேடுதே” பாட்டே சிந்து பைரவிதாங்க

” நாடோடித்தென்றல்” படத்துல “மணியே மணிக்குயிலே”-ங்கற பாட்டுக்கு அவரோகணம் மட்டுமே பயன்படுத்தியிருப்பார். அதே மாதிரி “என்னை விட்டு போகாதே” படத்துல வர்ற “பொன்னப்போல ஆத்தா..” பாட்டுக்கும் அவரோகணம் மட்டுமே பயன்படுத்தியிருப்பார்.

இந்த ராகத்துல இசைஞானி போட்ட பாட்டுல எனக்கு ரொம்ப புடிச்சது “சின்னக்குயில் பாட்டு” படத்துல வரும் “சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது”ங்கற பாட்டு. கேட்டு பாருங்க, நீங்களும் அப்படித்தான் சொல்லுவீங்க.

“கேப்டன் பிரபாகரன்”-ல “ஆட்டமா தேரோட்டமா”-வ தட்டியெடுத்துருப்பாருங்க

“திருப்புமுனை” படத்துல வரும் “அம்மானா சும்மா இல்லடா” பாட்டு ஒரு கலக்கல் டியூன்ங்க.

அதே மாதிரி “செம்பருத்தி” படத்துல “கடலுல எழும்புற அலைகள” பாட்டுலயும் ஒரு கலக்கு கலக்கியிருபார்.

இந்த ராகத்துல நம்ம மூச்சுக்காத்த தெனறடிக்கற மாதிரி ஒரு பாட்டு பண்ணியிருக்காருங்க. “சத்யா” படத்துல வர்ற “வளையோசை கலகலகலவென கவிதைகள்”-ங்கற பாட்டுத்தாங்க.

“ஜானி” படத்துல “ஆசைய காத்துல தூதுவிட்டு…”, நாட்ட பைரவிய கலந்து பண்ணின பட்டுங்க இது.

“தேவர்மகன்” படத்துல வர்ற “இஞ்சி இடுப்பழக”-வையும், “எங்க ஊருப்பாட்டுக்காரன்” படத்துல வரும் “செண்பகமே செண்பகமே”-வையும், “அவதாரம்” படத்துல வரும் “தென்றல் வந்து தீண்டும்போது”-வையும், “பகலில் ஒரு இரவு” படத்துல வர்ற “இளமை எனும் பூங்காற்று” பாட்டயும் கேட்டு மயங்காதவங்க இருப்பாங்களா?

சரி, இந்த ராகத்துல போட்ட ஞானியின் மெட்டுக்களை வரிசைப்படுத்துறேன்…

“ஆச அதிகம் வச்சு… – மறுபடியும்”
“ஆசய காத்துல தூதுவிட்டு…” – ஜானி”
“ஆட்டமா தேரோட்டமா…” – கேப்டன் பிரபாகரன்”
“அடி மத்தாளத்த… – மல்லுவேட்டி மைனர்”
“அக்கம் பக்கம் பாரடா… – உன்னால் முடியும் தம்பி”
“அம்மானா சும்மா இல்லடா… – திருப்புமுனை”
“அம்மன் கோயில் கும்பம்… – அரண்மனைக்கிளி
“அன்னக்கிளி உன்னை தேடுதே… – அன்னக்கிளி”
“அன்னல் காந்தி… – தேசியகீதம்”
“பொம்முக்குட்டி அம்மாவுக்கு… – என் பொம்முக்குட்டு அம்மாவுக்கு”
“சின்னக்குயில் ஒரு பாட்டு… – சின்னக்குயில் பாட்டு”
“என் காவிரியே கண்ணீர் எதற்கு… – எங்க ஊரு மாப்பிள்ளை”
“என் மனவானில் சிறகை விரிக்கும்… – காசி”
“எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்… – தாலாட்டு”
“என்ன மறந்தாலும்… – காதல் சாதி”
“என்ன சத்தம் இந்த நேரம்… – புன்னகை மன்னன்”
“என்னம்மா கன்னு செளக்யமா… – மிஸ்டர் பாரத்”
“இளமை எனும் பூங்காற்று… – பகலில் ஒரு இரவு”
“இஞ்சி இடுப்பழகா… – தேவர் மகன்”
“கடலுல எழும்புற அலைகள… – செம்பருத்தி”
“காதலிலே தோல்வி… – செம்பருத்தி”
“கல்யாண மாலை கொண்டாடும் பெண்னே… – புதுப்புது அர்த்தங்கள்”
“மானே தேனே கட்டிப்புடி… – உதயகீதம்”
“மாதா உன் கோயிலிலே… – அச்சாணி”
“மணியோசை கேட்டு எழுந்து… – பயணங்கள் முடிவதில்லை”
“மணியே மணிக்குயிலே… – நடோடித்தென்றல்”
“மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்… – பணக்காரன்”
“முத்து மணி மாலை… – சின்னக்கவுண்டர்”
“முத்து மணி முத்து மணி… – அதர்மம்”
” நான் ஒரு சிந்து… – சிந்து பைரவி”
” நிலவே முகம் காட்டு… – எஜமான்”
” நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு… – கண்ணுக்குள் நிலவு”
“ஓ வெண்ணிலாவே… – ஆனந்தக்கும்மி”
“ஊருக்கொரு கட்சியும்… – ரமணா”
“ஒரு நாளும் உனை மறவாத… – எஜமான்”
“ஒரு சந்தனக்காட்டுக்குள்ளே… – எல்லாமே என் ராசாதான்”
“பதியைவிட்டு பிரிந்த… – காதல் சாதி”
“பொன்னப்போல ஆத்தா… – என்னை விட்டுப்போகாதே”
“பூங்காற்று புதிதானது… – மூன்றாம்பிறை”
“பொட்டலுக்காட்டுல… – காதல்சாதி”
“புண்ணியம் தேடி காசிக்குப்போவார்… – காசி”
“ரகுபதி ராகவ… – ஹேராம்”
“சேர்ந்து வாழும் நேரம்… – தொடரும்”
“செண்பகமே செண்பகமே… – எங்க ஊருப்பாட்டுக்காரன்”
“சோலப்பசுங்கிளியே… – என் ராசவின்மனசிலே”
“தீராத விளையாட்டுப்பிள்ளை… – காற்றுக்கென்ன வேலி”
“தென்றல் வந்து தீண்டும்போது… – அவதாரம்”
“தோள் மேல தோள் மேல… – பூமணி”
“வளையோசை கலகலகல… – சத்யா”
“வெள்ளிமணிக்கிண்ணத்திலே… – தர்மத்தின் தலைவன்”
“வித்யா வித்யா நடனம்… – இதயத்தைத் திருடாதே”
“விரலில் சுதி மீட்டவா… – நந்தவனத்தேரு”
“யார் தூரிகை… – பாரு பாரு பட்டணம்பாரு”

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: